கடந்த சில வாரங்களுக்கு முன்பு கருத்து வேறுபாட்டால் இருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜா தனது நண்பர்களிடம் இனி நவீன்குமாருடன் எந்த தொடர்பும் யாரும் வைத்துக்கொள்ளக்கூடாது என கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று ராஜா மற்றும் நவீன் குமார் இருவர்களின் நண்பருக்கு பிறந்தநாள் விழா நடைபெற்றது.
இதை முன்னிட்டு அன்றைய தினத்தில் இருவரையும் சமாதானப்படுத்தி வைப்பதற்காக நவீன் குமாரை பிறந்தநாள் விழாவிற்கு அழைத்துள்ளனர். இதில் நவீன்குமார், ராஜா மற்றும் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மது அருந்திவிட்டு, ராஜா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து நவீன்குமாரை சரமாரியாக அறிவாளால் வெட்டி சாய்த்து உள்ளனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர்
அங்கு நவீன் குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே நவீன்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து உயிரிழந்த நவீன் குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்து விட்டு தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர். உடன் இருந்த நண்பர்களே தனது நண்பரை அறிவாளால் வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும்,சோகத்தையும் ஏற்படுத்தியது.