தொட்டியம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு - பதட்டம்

திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த தோளூர்பட்டியை சேர்ந்தவர் ஞானசேகரன் (60). இவருக்கு சொந்தமான கடையை தொட்டியம் பாலசமுத்திரத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கு மளிகை கடை வைப்பதற்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் முருகானந்தம் நடத்திவரும் மளிகை கடை முன்பாக பெட்ரோல் குண்டை வீசியதாக கூறப்படுகிறது. இதில் கடையின் வெளியே வைக்கப்பட்டிருந்த உப்பு மூட்டைகள் எரிந்து போனது. கடையின் சுவரில் சிறு பகுதி பெயர்ந்து விழுந்தது. சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்த ஞானசேகரன் இதுகுறித்து தொட்டியம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் போலீஸ் திருச்சி மாவட்ட ஏடிஎஸ்பி கோடிலிங்கம், தொட்டியம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) கதிரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் சந்தேகத்தின் பேரில் மூன்று நபர்களை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் பெண்ணுடன் பேசுவது தொடர்பாக ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த சம்பவம் நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post