எம்.பி சிவா திருச்சியில் உருக்கமான பேட்டி


 திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவாவின் வீடு மற்றும் காரை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்களால் நேற்று அடித்து நொறுக்கப்பட்டது. இந்தநிலையில் வெளிநாட்டு (பக்ரைன்) பயணத்தை முடித்துக்கொண்டு திருச்சி திரும்பிய எம்.பி திருச்சி சிவா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், நடைபெற்ற சம்பவங்களை சமூக ஊடகங்கள், ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டேன். வீட்டில் இருந்த முதியவர்கள் கூட தாக்குதலுக்கு ஆளாகி உள்ளார்கள். இதனால் மிகுந்த மனவேதனை அடைந்தேன். கடந்த காலங்களில் பல்வேறு சோதனைகளை சந்தித்துள்ளேன்.

என்னை விட கட்சி தான் எனக்கு முக்கியம். தனி மனிதனை விட இயக்கம் பெரிது என்றார். இப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்த எம்.பி. சிவா, பேசுவதற்கு நிறைய உள்ளது.  ஆனால் நான் தற்போது பேசும் மனநிலையில் இல்லை. நாளை மீண்டும் சந்திக்கிறேன் என கூறி பேட்டியை முடித்துக் கொண்டார்.


Post a Comment

Previous Post Next Post