திருச்சி மாவட்டம் துறையூர் கொப்பம்பட்டி முதலியார் தெரு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் மாலதி (வயது 24). இவர் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் கொப்பம்பட்டியில் உள்ள ஒரு அரசு நடுநிலைப் பள்ளி–யில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
கடந்த 9-ந்தேதி வழக்கம்போல் பெற்றோரிடம் கூறிவிட்டு பணிக்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.
இந்த நிலையில் மகள் காதல் வலையில் சிக்கியது தெரியவந்தது. கொப்பம்பட்டியை சேர்ந்த ராஜா மகன் பிரசாந்த் (27) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்பட்டது. இதை யடுத்து அந்த வாலிபருடன் மாலதி ஓட்டம் பிடித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான ஆசிரியையை தேடி வருகிறார்கள்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்