காப்பாற்ற வந்த தொழிலாளியை இறுக்கி கொன்ற மலைப்பாம்பு ; கிருஷணகிரி அருகே பரிதாபம்

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே கல்குட்டபட்டியை அடுத்த மேல்கொட்டாயை சேர்ந்தவர் சின்னசாமி. இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இவருடைய 50 அடி ஆழ கிணற்றில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மலைப்பாம்பு விழுந்ததை பார்த்துள்ளார். 

அந்த மலைப்பாம்பை கிணற்றிலிருந்து வெளியே எடுப்பதற்காக இன்று நடராஜ் என்பவர் முன்வந்து கிணற்றில் இறங்கியுள்ளார். மலைப்பாம்பை கிணற்றின் பாதி வரை தூக்கி வந்த பின்பு எடை தாங்காமல் மலைப்பாம்பும் அவரும் கிணற்றில் விழுந்துள்ளனர். அப்பொழுது அவரை மலைப்பாம்பு இறுக்கி பிடித்துள்ளது. அவர் கூச்சலிடவே அருகில் இருப்பவர்கள் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடாசலம் தலைமையில் தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் நடராஜனை மீட்க போராடினர். ஆனால் மலைபாம்பு அவரை இறுக்கியதில் நடராஜ் உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். 

இது குறித்து காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் முரளி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். மலைபாம்பை காப்பாற்ற சென்றவர் அந்த பாம்பாலேயே உயிரிழந்த தகவல் அறிந்த சுற்றுப்பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Post a Comment

Previous Post Next Post