மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் திருச்சியில்... கச்சதீவை மீட்க சட்டரீதியான நடவடிக்கை என பேட்டி

 

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமான மூலம் திருச்சி வந்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்... கச்சதீவை மீட்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரே நாடு, ஒரேத்தேர்தல் பற்றி நாடு நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. தகுந்த நேரத்தில்  நடவடிக்கை எடுக்கப்படும்.

சாவர்க்கர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவில்லை என பெரும்பாலான தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தெரிவிக்கிறார்கள் என்ற கேள்விக்கு, திமுக மட்டுமே அவ்வாறு சொல்லி வருகிறது. எந்த கட்சி சொன்னாலும், அவரது வரலாற்றை படித்தால் அவரை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

திமுகவின் ஊழல்களை மற்றும் குடும்ப ஆட்சியை தொடர்ந்து பாஜக எதிர்த்தும், சுட்டிக்காட்டியும் வருகிறது. இதன் காரணமாக தமிழக மக்களின் ஆதரவு பாஜகவிற்க்கு அதிகரித்து வருகிறது. நாட்டின் பாதுகாப்பிற்காக சீன உளவு கப்பலை தீவிரமாக மத்திய அரசு  தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

Post a Comment

Previous Post Next Post