திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் புலிவலம் பகுதியில் சாலை விஸ்தரிப்பு செய்யப்படுவதால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றது... கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலை சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டு இருந்தது... தற்போது முழு வேகத்தில் சாலைவிஸ்தரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அந்த வேலைகள் தடைபடாமல் இருப்பதற்காக காவல்துறையினரின் உதவியுடன் நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.
புலிவலம் சுற்றுவட்டார பகுதிகளான கரட்டாம்பட்டி பகளவாடி ஆகிய பகுதிகளில் ஏற்கனவே சாலை விஸ்தரிப்பு செய்து விட்ட காரணத்தினால் அடுத்த கட்ட நடவடிக்கையாக புலிவலத்திலும் இந்த சாலை விஸ்தரிப்பு நடைபெற்று வருகின்றது...
Tags:
நம்ம ஊரு செய்திகள்