முக்கொம்பு மேலணைக்கு 1 லட்சத்து 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரத்து

திருச்சிராப்பள்ளி முக்கொம்பு மேலணைக்கு, மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட ஒரு இலட்சத்து 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதை முன்னிட்டு, முக்கொம்பு காவிரியாற்றில் 47874 கன அடியும், கொள்ளிடம் ஆற்றில் 65639 கன அடியும், பாசன வாய்க்காலில் ஆயிரம் கன அடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார்,  முக்கொம்பு மேலணைக்குத் தண்ணீர் வரத்து மற்றும் திறப்பு நடவடிக்கைகளை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்து, இப்பணிகளை முழு கவனத்துடன் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வின்போது நீர்வளத்துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


Post a Comment

Previous Post Next Post