ராஜஸ்தானில் போர் விமானம் தீப்பிடித்து 2 விமானிகள் உயிரிழப்பு

 

ராஜஸ்தானில் போர் விமானம் தீப்பிடித்து விபத்திற்குள்ளானதில், இரு விமானிகள் உயிரிழந்தனர். அங்குள்ள பார்மர் மாவட்டத்தில் மிக் 21 ரக போர்விமானம் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது,  போர் விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்நிலையில், விமானம் முழுவதும் எரிந்து நாசமானதில் 2 விமானிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனா். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.


Post a Comment

Previous Post Next Post