மணப்பாறை அருகே பரிதாபம் ; குளிக்க சென்ற 3 சிறுவர்கள் உயிரிழப்பு

 

திருச்சி மாவட்டம் மணப்பாறை காட்டுப்பட்டி அண்ணாவி நகரை சேர்ந்த முருகன். மர வேலை செய்பவர். இவரது மகன்கள் மணி (16),  முரளி (12) ஆகியோர் பூசாரிப்பட்டி பாப்பான்குளத்தில் குளிக்க சென்றனர். இந்த இரண்டு சிறுவர்களுடன் அஸ்வின் (13) என்ற சிறுவனும் சேர்ந்து 3 பேரும் குளத்தில் குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது ஆழப்பகுதிக்கு சென்ற 3 சிறுவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் 3 சிறுவர்களை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்

மகன்கள் இருவரும் உயிரிழந்ததை கேட்ட அதிர்ச்சியில் மயங்கி விழுந்த தந்தை முருகன், மணப்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குளத்தில் 3 சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post