மண்ணச்சநல்லூரில் தலைக்கவசம் மற்றும் கொரோனா விழிப்புணர்வு வாகனபேரணி


திருச்சிமாவட்டம், மண்ணச்சநல்லூரில் தலைக்கவசம் மற்றும் கொரோனாவிழிப்புணர்வு இருசக்கரவாகன பேரணிநடைபெற்றது. 

தலைக்கவசம் அணிவதன் அவசியத்தைபொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி நடத்தப்பட்டது. மலைகோட்டை மாநகர இருசக்கரவாகன பழுது நீக்குவோர் தொழில்சங்கம் சார்பில் நடைபெற்ற இந்தபேரணியை மண்ணச்சநல்லூர் காவல் உதவிஆய்வாளர் அருண்குமார் துவக்கிவைத்தார்

காந்திபூங்காவில் துவங்கிய பேரணிமுக்கிய வீதிகளின் வழியாகசென்று திருப்பைஞ்சிலி சாலையில் உள்ளதனியார் திருமண மண்டபத்தை அடைந்தது. தொடர்ந்து அந்தமண்டபத்தில் பயிற்சி கூட்டம் நடைபெற்றது. 

மாவட்டதலைவர் சக்திவேல் தலைமை வகித்தார் மாவட்டசெயலாளர் அன்புராஜ், மாவட்டபொருளாளர் செல்வமணிஆகியோர் முன்னிலைவகித்தனர். மண்ணச்சநல்லூர் வட்டார தலைவார் செல்வகுமார் வரவேற்றார். காவல் உதவிஆய்வாளர் அருண்குமார் தலைக்கவசம் அணிவதன் அவசியம் பற்றிஎடுத்துரைத்தார். 

மேலும் வாகனங்களை எளிமையாக பழுது பார்ப்பது தொடர்பாக பயிற்சியளிக்கபட்டது. இதில் மாவட்டநிர்வாகிகள் லட்சுமணன், ராமமூர்த்தி, பாலசுப்பிரமணி, சையத்லீஜீயாஸ், அருள்ஜேம்ஸ், செல்வம்,செந்தில் உள்படதிருச்சிமாநகரம், திருக்காட்டுபள்ளி, துப்பாக்கி தொழிற்சாலை, காட்டுர், திருவரம்பூர், துறையுர்,  நாகமங்கலம், மண்ணச்சநல்லூர் உள்ளிட்டபகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டமெக்கானிக்குகள் கலந்துகொண்டனா;. 

Post a Comment

Previous Post Next Post