ஒருங்கினைந்த கோவை மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாக வசதிக்காக பொள்ளாச்சியை புதியதொரு வணிக மாவட்டமாக செயல்படுத்தும் நிகழ்ச்சி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் பொள்ளாச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கோவை, கிணத்துக்கடவு, வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கூறுகையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வருக்கு வணிகர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஞாயிறு ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம்.
கோரிக்கையை ஏற்று செயல்படுத்திய முதல்வருக்கு தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவித்த அரசு பொள்ளாச்சியை மாவட்டமாக்க முதல்வர் விரைவில் அறிவிக்க வேண்டும் எனவும், வெளிநாட்டு நிறுவனங்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் கொண்ட கமிட்டி அமைத்து விலைவாசி ஏற்றத்தை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்து வால்பாறையை சரணாலய பகுதியில் இருந்து விடுவித்து விடவேண்டும்