லால்குடி மகா மாரியம்மன் கோவிலில் இன்று பூச்சொரிதல் விழா

 


திருச்சி மாவட்டம் லால்குடியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமகாமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.  

இக்கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர்  தினமும் வந்து அம்மனை தரிசனம்  செய்துவிட்டு செல்கிறார்கள்.

இங்கு ஆண்டுதோறும் தை மாதத்தில் பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது  வழக்கம். அந்த வகையில், இன்று (30.01.2022, ஞாயிற்றுக்கிழமை) மாலை பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது.

நாளை (31.01.2022) அன்று காலை 8.00 மணி அளவில் லால்குடி தெற்கு வீதியில் மாபெரும் மாட்டு வேடிக்கை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த விழாவிற்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு,  தொழில் அதிபர் அருண்நேரு, பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவர் தன்ராஜ் சேதுராயர் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். 

இதில் சிறப்பு விருந்தினர்களாக  அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் ப.குமார் ஆகியோர் பங்கேற்கிறார்கள். 

இந்த ஜல்லிக்கட்டிற்கு காளையுடன் வரும் உரிமையாளர், உதவியாளர் ஆகியோர்களுக்கு  கொரோனா இல்லை என்று உறுதிச்சான்று வைத்திருக்க வேண்டும், மாடுபிடி வீரர்களுக்கான அடையாள அட்டை பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வைத்திருக்கவேண்டும். 

பார்வையாளர்கள் முகக்கவசம் அணிந்து போதுமான இடைவெளியை கடைபிடிக்க    வேண்டும் என நிபந்தனைக்களுடன் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று விழா குழுவினர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிகழ்சி ஏற்பாடுகளை பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் துணைத்தலைவர்  காத்தான், மார்க்கெட் அசோக்,  தக்காளி சிவா, அபிஷேகபுரம் கங்கா ஆகியோர் செய்து வருகிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post