தா.பேட்டை அருகே உள்ள பொன்னுசங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நல குறைவால் இறந்தார். இவரது மகன் பிரவீன் (14) 9ம் வகுப்பு படித்து வந்தான். இவர் முசிறியிலிருந்து துறையூர் செல்லும் சாலையில் சைக்கிளில் சென்றார்.
அப்போது பின்னால் வந்த சரக்கு ஆட்டோ சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பிரவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு ஆட்டோ டிரைவர் நந்தகுமார் (41) என்பவரை கைது செய்தனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்