சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு காது கேட்கும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் கலந்து கொண்டு காது கேட்கும் கருவியை வழங்கினார். அப்போது திருச்சி அரசு மருத்துவமனைக்கு ரூ.16 லட்சம் மதிப்புள்ள உயர்தர செவித் திறன் குறைபாடு கண்டறியும் மற் றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை காது, மூக்கு தொண்டை துறை தலைவர்களிடம் வழங்கினார். இது தொடர் பாக திருச்சிஅரசு மருத்துவமனை டீன் வனிதா கூறுகையில், காது கேளாதோர் விகிதம் பிறந்த குழந்தைகளு 1 சதவீதம் முதல் 2 சதவீதமாக உள்ளது. இதற்காக குழந்தை பிறந்த உடனே பரிசோதனை செய்து அதற்கான அறுவை சிகிச்சை செய்தால் காது கேளாதோர் விகிதம் குறைக்கப்படும். இதன் மூலம் பிறந்த குழந்தைகளின் காது கேட்கும் திறன் உடனடியாக சோதிக்கப் பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு காது கேட்கும் திறன் மற்றும் பேசும் திறன் மீட்கப்படும். இதுமட்டுமின்றி நடுத்தர வயதில் சாதாரணமாக சீழ் வடிதல் மூலமாக ஏற்படும் காது கேட்காத பிரச்சினைகள், வயது முதிர்ந்த காலத்தில் நரம்பு தளர்ச்சியினால் ஏற்படும் காது கேட்காத தன்மையினையும் இந்த உபகரணங்கள் மூலம் கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை மற்றும் காது கேட்கும் கருவி பொருத்தலாம் என்றார்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்