அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து புகழேந்தி நீக்கம்

 


சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் மற்றும் கொறாடாவை தேர்தேடுப்பதற்காக அக்கட்சியின் எம்.எல்.ஏ கூட்டம் கட்சியின் தலைமையகத்தில்  இன்று நடைபெற்றது. சுமார் நான்கு மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.மேலும், சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய அதிமுகவினர் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவர் என அதிமுக தீர்மானம் நிறைவேற்றியது.

இந்நிலையில், அதிமுகவிலிருந்து செய்தி தொடர்பாளர் புகழேந்தி நீக்கம் செய்யபப்ட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திரு. வா. புகழேந்தி கழக செய்தித் தொடர்பாளர், கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர்இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று பாமக குறித்து விமர்சனம் செய்த நிலையில், இன்று அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து புகழேந்தி நீக்கம் செய்யபப்ட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் முன்னாள் அமைச்சர் ஆனந்தன், முன்னாள் எம்பி வி.கே.சின்னசாமி தேனி மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் அழகர்சாமி உள்ளிட்ட 15 பேரை கட்சியில் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டு அதிரடி காட்டியுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post