மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோவிட்ஷீல்ட் தடுப்பூசி

 


திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர்  அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோவிட்ஷீல்ட் தடுப்பூசி 500 நபர்களுக்கு  போடப்படுகிறது. பொதுமக்கள் இன்று காலை 10 மணி முதல் மேற்கண்ட அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1) தடுப்பூசி போடுவதற்கான டோக்கன் காலை 9 மணி முதல் வழங்கப்படும்.

[ முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட  நாளிலிருந்து 84 நாட்கள் முடித்தவர்களுக்கு மட்டுமே இரண்டாம் தவணை போடப்படும் .]

2) 18-44 வயதுடையவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்படும்.

3) 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் தவணை மட்டும் போடப்படும்.

4) தடுப்பூசி போட வருபவர்களில் வெளிநாடு செல்வோர் தங்கள் பாஸ்போர்ட்டை கொண்டு வரவும்.

5) மேற்கண்ட தடுப்பூசி மையத்தில் முன்கள பணியாளர்களுக்கு தனியாக தடுப்பூசிகள் போடப்படும்.

தடுப்பூசி போட வருபவர்கள் ஆதார் அட்டை கொண்டு வரவும்.

கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவும். சமூக இடைவெளியை பின்பற்றவும்.

தாங்கள் பாதுகாப்பாக தடுப்பூசி போட்டு செல்வதற்கு மண்ணச்சநல்லூர் சுகாதாரத்துறை, மண்ணச்சநல்லூர் பேரூராட்சி நிர்வாகம், நகர திமுக கழகம், பாலு (ஆசிரியர்), மோகன்ராஜ் (முன்னாள் கவுன்சிலர்) ஆகியோர் சார்பாக கேட்டுக்கொள்ள படுகிறது.

Post a Comment

Previous Post Next Post