அம்மன்கோவில்களில் மிகவும் பிரசித்திபெற்றது சமயபுரம் மாரியம்மன் ஆகும். இந்தகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பஞ்சப்பிரகாரவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்தஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோவில் மற்றும் வழிபாட்டு தலங்களில் நடைபெறும் விழாவுக்கு தமிழகஅரசு தடை விதித்துள்ளது. மேலும், கோவிலுக்குள்சென்று சாமியை வணங்குவதற்கும் பக்தர்களுக்கு அரசு தடைவிதித்து உள்ளது.
இதனால் நேற்று பக்தர்கள் இன்றி சமயபுரம்மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகாரவிழா நடைபெற்றது. இதனால் பஞ்சப்பிரகார விழாவை ஆன்லைன் மூலம் பக்தர்கள் வீட்டிலிருந்தே காணும் வகையில் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த விழாவையொட்டி ஒரு தங்க குடம், 25 வெள்ளிக்குடங்களில் புனிதநீர் நிரப்பப்பட்டு வசந்த மண்டபத்திற்கு முன்பாக வைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை உற்சவ அம்மனுக்கு சிறப்புஅபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அம்மன் தங்க கவச அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் அம்மனுக்கும், விநாயகருக்கும் சிறப்புபூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
Tags:
நம்ம ஊரு செய்திகள்