கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் தீவிபத்து: பெண் உட்பட 3 பேர் பலி


கடலூர்,

கடலூர் சிப்காட் பகுதியில் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. அங்கு காலைப்பணியில் 100க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்த தொழிற்சாலையில் இன்று காலை திடீரென பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த விபத்துக்கு நிர்வாகத்தின் அலட்சியம்தான் காரணம் என உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தோரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். கரும்புகையுடன் ஆலை காட்சியளிக்கும் நிலையில் தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் ரசாயன கசிவு காரணமாக அப்பகுதியில், பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.




Post a Comment

Previous Post Next Post