உயிரிழந்த பணியாளர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்: பா.ஜ.க

 


சென்னை : ''முதல்வர் தன் வாக்குப்படி, உயிரிழந்த பணியாளர் குடும்பங்களுக்கு, 1 கோடி ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கி உத்தரவிட வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முருகன் விடுத்த அறிக்கை: கடந்த ஆண்டு ஏப்., 15ல், தி.மு.க., உள்ளிட்ட 11 கட்சி கூட்டணியினர், 'கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு, சிறப்பு ஊதியம், ஊதிய உயர்வுகள் வழங்க வேண்டும். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு, தமிழக அரசு, 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்' என்ற தீர்மானத்தை நிறைவேற்றினர். அப்போதைய அ.தி.மு.க., அரசு, ஆக., 6ல், இறந்த முன்கள பணியாளர்களின் குடும்பங்களுக்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தபோது, 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.

'சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்' என்ற திருவள்ளுவரின் குறளுக்கு ஏற்ப, எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒன்றை பேசிவிட்டு, ஆளுங்கட்சியாக இருக்கும் போது, மாற்றி பேசுவது அழகல்ல.ஆகவே, முதல்வர் தன் வாக்குப்படி, உயிரிழந்த பணியாளர் குடும்பங்களுக்கு, 1 கோடி ரூபாய்; குடும்பத்தில் ஒருவருக்கு, அரசு வேலையும் வழங்கி உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post