கவுண்டம்பட்டியில் 150 வருட பழைமையான மரம் மழை காற்றில் விழுந்தது ; இருளில் மூழ்கிய கிராமம்

 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் கவண்டம்பட்டி மேலூரில் ஶ்ரீ மகா சூலினி மாரியம்மன் கோவில் உள்ளது.

இங்கு 22 வருடங்களுக்கு முன்பு கோவில் கூரை வீட்டில் இருந்தபோது இதுதான் கோவில் மரமாக விளங்கியது.

கடந்த 2001 ஆம் ஆண்டில் ஒட்டு கட்டிடத்திற்கு மாரியம்மனை மாற்றி அமைத்து வழிபட்டு வந்தனர்.

இந்தநிலையில் இன்று பெய்த மழை காற்றில் யாரும் எதிர்க்காமல் மரம் விழுந்ததில் அதில் ஒரு கிளை மட்டும் மின் கம்பத்தில் விழுந்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மரம் விழுந்த நேரத்தில் யாரும் அங்கு இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post