வாத்தலை காவல்நிலையத்தில் திறக்கப்படாத கதவு ; புகார் அளிக்க சென்றவர் அதிருப்தி


திருச்சி மாவட்டம், வாத்தலை காவல் சரகத்திற்கு உட்பட்ட கொடுந்துரை சாலையில் நேற்று அதிகாலை சில மர்ம நபர்கள் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட நபர் ஒருவரை அந்த கும்பல் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது.

இதனையடுத்து தாக்குதலுக்கு ஆளான நபர் வாத்தலை காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றுள்ளார். அப்போது காவல் நிலைய கதவு மூடியிருந்ததால் ஐயா...ஐயா...என சத்தம்போட்டு கூப்பிட்டுள்ளார். ஆனால் யாரும் உள்ளே இருந்து வராததால் சிறிது நேரம் காத்திருந்த இருக்கிறார் அந்த நபர். வெகு நேரமாகியும் யாரும் வராததால் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.

பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 24 நேரமும் காவல் நிலையத்தில் வந்து புகார் அளிக்கலாம் என்று கூற்று இருந்து வரும் நிலையில் தற்போது பொங்கல் விழா நாட்களிலும் காவல் நிலையம் மூடப்பட்டிருந்தது பொதுமக்களிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post