2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் திமுகவும், அதிமுக கூட்டணியில் தேமுதிக வும், பாஜக கூட்டணியில் பாமக, ஐ ஜெ கே, தினகரன், பன்னீர்செல்வம், என களம் காண்கின்றனர்
அந்த வகையில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக சாரமாக சூரியன் சின்னத்தில், அமைச்சர் நேரு மகன் அருண் நேருவும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் தம்பி மகன் சந்திரமோகனும், பாஜக சார்பாக ஐ ஜெ கே பாரிவேந்தர் பச்சமுத்துவும் வலுவான மோதலில் உள்ளனர்
இந்த நிலையில் திமுக, பாஜக என இரண்டு கட்சிகளும் முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவருக்கு யாரும் சீட் வழங்கவில்லை, பாஜகவில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் தமிழர் தேசம் கட்சிக்கே சீட் கொடுக்கவில்லை.
தமிழகத்திலேயே முத்தரையர் சமூகத்திற்கு ஒரே ஒரு சீட் வழங்கியது அதிமுக
சட்டமன்ற தேர்தலின் போதே மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தேர்தலில் திமுக முத்தரையர் சமுதாயத்திற்கு சீட் வழங்காமல் அமைச்சர் நேருவின் சமுதாயத்திற்கு சீட் கொடுத்து வெற்றி பெற வைத்தனர்.
இப்போதும் கூட திமுக வில் தனது மகனுக்கு சீட் வாங்கி கொடுத்து திமுக வில் முத்தரையர் சமூகத்தினரை அழிக்க துடிக்கிறார் நேரு என்று முன்னாள் எம் எல் ஏ ராஜசேகரன் சமீபத்தில் பேட்டி அளித்தார்.
அதுபோல பாஜக வில் வேட்பாளராக நிற்கும் பாரிவேந்தர் பச்சமுத்து போனமுறை முத்தரையர் சமூகத்தின் ஓட்டை வாங்கி வெற்றி பெற்று. இன்றும் முத்தரையர் சமூகத்தின் வாக்குகளை பெற பார்க்கிறார் என்று முத்தரையர் சமூகத்தினர் பெரும் குமுறலில் உள்ளனர்
இந்தமுறை அதிமுக வில் முத்தரையர் வேட்பாளர் வெற்றி பெற வைக்கவேண்டும் என்று அந்த சமூகத்தினர் ஊர் ஊருக்கு சென்று கூட்டம் போட்டும், திண்ணை பிரச்சாரம் செய்தும் வாக்கு சேகரித்து வருகின்றனர். அதுபோல தாணு என்பவர் மண்ணச்சநல்லூர் பகுதிகளில்
முழித்துக்கொள்... விழித்துக்கொள்
இருண்ட காலம் முடியட்டும்... வசந்த காலம் விடியட்டும்
முத்தரையர் ஓட்டு முத்தரையர் கே
என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒட்டி வருகிறார். இதனால் திமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் மாற்று சமூகம் என்பதால் முத்தரையர் சமூகத்தினர் அனைவரும் பணத்திற்கு ஓட்டு போடாமல் இந்தமுறை சமூகத்திற்காக ஓட்டு போடுவதாக சொல்லி வருவதால் திமுக, பாஜக விற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது