திருச்சி மாவட்டம் முசிறி காவிரி கரை மற்றும் மேட்டுப்பட்டி ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பனை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் முசிறி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது முசிறி பகுதியில் கள் விற்றதாக முசிறி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் மணிகண்டன் (35), உமையாள்புரம் கொல்லத்தெருவை சேர்ந்த நல்லதம்பி (47), சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கொத்தம்பட்டி அண்ணா நகரை சேர்ந்த மணிவேல் (55), வீரகவுண்டனூரை சேர்ந்த தனசேகர் (45), தொட்டியம் அருகே உள்ள சீனிவாச நல்லூர் பதனிதோப்பை சேர்ந்த செல்லமுத்து (60) ஆகிய 5 பேரை முசிறி போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 24 லிட்டர் கள்ளையும் பறிமுதல் செய்தனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்