திருச்சி மாவட்டம், முசிறி அருகே வாரத்திற்கு ஒரு முறை திருட்டு நடப்பது அரங்கேறிய வண்ணமாகவே உள்ளது. கடந்த 1 வாரத்திற்கு முன்பு சோழங்கநல்லூர் பகுதியில் ஒருவன் தான் கோழி வாங்க வருவதாக கூறி தொடர்ந்து 2, 3 நாட்கள் வந்து அந்த பகுதி இளைஞர்களிடம் பழகி, அவரடம் கையில் வைத்திருந்த மொபைல் போனை வீட்டில் சார்ஜ் போட்டுவிட்டு, உங்கள் வண்டிய கொடுங்க நான் ஓட்டிப்பார்த்து தருகிறேன் என்று கூறி போனவன் வரவே இல்லையாம்.
பிறகு போனும் திருட்டு போனாக இருந்தது தெரியவந்தது இரண்டு வாகனத்தின் உரிமையாளர் அதிரிச்சியானார். அந்த வாகனத்தின் மதிப்பு சுமார் 2 இலட்சம் வருமாம். பிறகு வாத்தலை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு அந்த நபரின் முகவரியை கண்டு பிடித்தும், இதுநாள்வரை தலைமறைவாக சுற்றுவதாக தெரிகிறது. வாகனத்தை திருடிய நபர் ஒரு வாகனத்தை திருடினால் அந்த வாகனத்தின் பெட்ரோல் எந்தளவு உள்ளதோ, அந்த அளவிற்கு ஓட்டி போகிற போக்கில் அடுத்த வாகனத்தை திருடி செல்வாராம்.
அடுத்ததாகமுசிறி அருகே கோமங்கலத்தில் ஒரு தனிநபர் தொடர்ந்து 2 நாட்கள் தோட்டத்தில் தனியாக இருக்கும் வீட்டில் ஆடு வாங்குவது போல் நோட்டம் விட்டு, அவர் வீட்டு சாவி எங்கு வைக்கிறார்கள் என்று பார்த்துவிட்டு, ஆள் இல்லாத நேரம் பார்த்து ரூபாய் 14 ஆயிரம் பணமும், ஒரு மொபைல் போனும் எடுத்து சென்று விட்டானாம்.
நேற்றும் 18-03-2024 மணியம்பட்டி அய்யம்பாளையத்திலும் குடியிருப்பு பகுதிகளில் பேசன் ப்ரோ வாகனத்தில் சென்று ஒரு வீட்டில் திருடி செல்லும்போது அந்த வீட்டு பெண் மடக்கிப் பிடித்து, கட்டையை பிடித்ததில் சட்டை கீழித்துக்கொண்டு 5 சவரன் நகை மற்றும் பணத்தை விட்டு ஓடி விட்டானாம், ஒற்றை நபராக ஊரை சுற்றி வந்து, வீட்டை நோட்டமிட்டு திருடுவது தொடர்கதையாகி வருகிறது. இதுபோல் யாரேனும் தனியாக யாரேனும் வீட்டை சுற்றி சுற்றி வந்தால் கொஞ்சம் சூதானமாக இருக்கும்படி சமூக ஆர்வலர்கள் சொல்லி வருகின்றனர்.