திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்ஞீலி கிராம பஞ்சாயத்திற்கு காவல்தெய்வமாக விளங்கி வரும் வனத்தாயி அம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் நடைபெறுவது வழக்கம்.
சுற்று பட்டிபாளையம் கிராமமாக இருக்கும் திருப்பைஞ்ஞீலி, மூவராயன்பாளையம், வாழ்மால்பாளையம், ஈச்சம்பட்டி, கவுண்டம்பட்டி ஆகிய ஊர்களுக்கு வனத்தாயி அம்மன் சப்பரத்தில் ஏரி அருள்பாளிப்பார்.
இதில் சின்னதேர் என்று சொல்லப்படும் சப்பரம் முதல் நாள் இரவு திருப்பைஞ்ஞீலி கிராமம் முழுவதும் கிடாவெட்டு விழா நடைபெறும், இரண்டாம்நாள் மூவராயன்பாளையம் மேலூர், கீழூர் ஊர்களுக்கு சென்று,
மூன்றாம் நாள் வாழ்மால்பாளையம் மேலூர், கீழூர், தெற்கியூர் ஊர்களுக்கு சென்று,
நான்காம் நாள் ஈச்சம்பட்டி மேலூர், கீழூர் ஊர்களுக்கு சென்று,
கடைசியாக கவுண்டம்பட்டி மேலூர், கீழூர் ஊர்களுக்கு சென்று அருள்பாளிப்பார் அம்மன்.
இந்த நிலையில் கடந்த 3 வருடங்களாகவே கடைசியாக கவுண்டம்பட்டிக்கு வரும் சப்பரம் எப்போது வரும் என்றே தெரியாத நிலையில்தான் இருந்து வருகிறார்கள்.
கிராமத்தார்கள் தனது சொந்தபந்தங்களுக்கு எப்போது வரசொல்வது என்று குழப்பத்திலேயே இருந்து வருகின்றனர்.
ஏனென்றால், எப்போதும் சனிக்கிழமை இரவு கவுண்டம்பட்டி மேலூர் சென்றடைந்து, ஞாயிற்றுக்கிழமை 2 மணிக்குமேல் கவுண்டம்பட்டி கீழூருக்கு சென்று அன்று இரவே திருப்பைஞ்ஞீலி சென்றடைந்து தரம்போடும் நிகழ்வு முடிந்து
பெரியதேர் தயார் செய்து, அந்த தேர் திருப்பைஞ்ஞீலி, மூவராயன்பாளையம், வாழ்மால்பாளையம் சென்றுவந்து திருவிழா முடிந்துவிடும்.
விழா கமிட்டியார்கள் ஒவ்வொரு வருடமும் இந்த தேதிகளில் இந்த ஊர்களுக்கு சப்பரம் செல்லும் என்று கொடுக்கும் செட்டியூலில் மாறாகவே நடைபெற்று வருகிறது என்பதுதான் வருத்தம்