திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் கைது

பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள், தனது வீட்டில் சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்காக அழைத்துச் சென்று கொடுமை செய்ததாக  புகார் எழுந்தது. இதுதொடர்பாக திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.சி., எஸ்.டி. உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இருவரும் தலைமறைவாகினர். இதையடுத்து இருவரையும் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இதனிடையே சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இன்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த ஆண்டோ மதிவாணன் மற்றும் மெர்லினா ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 

Post a Comment

Previous Post Next Post