தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் அனைவருக்கும் மாதம் ரூ.1000 கொடுப்பதாக கூறியிருந்தார். அதன்படி சில நிபந்தனைகளுக்குட்பட்டு கிராம நிர்வாக அலுவலர் உதவியாளர் மூலமாக இல்லம் தேடி கல்வி திட்டத்தில் இருக்கும் தன்னார்வலர்களை வைத்து வீடு வீடாக சென்று வெரிபிகேசன் செய்து முழுமையாக அப்ளிகேசன் விண்ணப்பம் செய்யப்பட்டது.
விண்ணப்பம் செய்த 100 அப்ளிகேசன்களில் 40 நபர்களுக்கு மட்டுமே பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதில் வேலை செய்த இல்லம்தேடி கல்வி திட்டத்தில் இருக்கும் தன்னார்வலர்கள் பெரும்பாளும் உள்ளூர் பெண்களாக இருப்பதாக, பணம் ஏறாத நபர்கள் வீடு தேடி வந்து ஏன் எங்களுக்கு ஏறவில்லை என்று பிரச்சினை செய்வதால்,
மகளிர் உரிமைத்தொகை வேலைக்காக நாங்கள் குழந்தையை கூட பார்க்காமல், ஞாயிற்றுக்கிழமையும் சென்று வேலை செய்தும், வீடு வீடாக சென்றும் வேலை செய்தும் இதுநாள்வரை வேலை செய்ததற்கான பணம் கூட ஏறவில்லை, இருந்தும் எங்களுக்கு ஊருக்குள் அவப்பெயராகத்தான் உள்ளது என்று வேதனை தெரிவிக்கின்றனர் இல்லம்தேடி கல்வி தன்னார்லர்கள்.