திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பஞ்சலி ஊராட்சியில் கவுண்டம்பட்டி கீலூரில் கடந்த சில நாட்களாக குடிநீர் திறந்து பட விடாமல் இருந்துள்ளது.
ஏற்கனவே இருந்த ஆபரேட்டர் திறந்த விட முடியவில்லை புதிதாக ஒரு ஆபரேட்டர் நியமனம் செய்யுமாறு தலைவரிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இது பற்றி பஞ்சாயத்து நிர்வாகம் எந்த வித நடவடிக்கை எடுக்காத நிலையில் குடிநீரும் திறந்து விடப்படாமல் இருந்து வந்துள்ள நிலையில்
குடிபோதையில் சில ஆசாமிகள் ஏறி குளித்தது மட்டும் இல்லாமல் ஹான்ஸ மற்றும் போதை பொருட்கள் குடிநீரில் கலந்து யூரின் போய் அசுத்தம் செய்தும் உள்ளனர்.
தற்போது அதிகாரிகள் வந்து உரிய நடவடிக்கை எடுத்து உறுதி அளிக்கும் வரை பஸ் மறியல் தொடரும் என பொதுமக்கள் கூறி வருகின்றனர்.
மறியலின் போது பள்ளி செல்லும் வாகனங்கள் மற்றும் கல்லூரி செல்லும் வாகனங்களுக்கு வழி விட்டு நின்ற பொதுமக்கள் பஸ் மறியலில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது