திருச்சி மாவட்டம், மண் மேலூரில் நேற்று இரவு 11.30 மணிக்கு மேல் வெறிநாய்கள் சேர்ந்து சுமார் 50க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து நாசமாக்கியதில் 6க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன.
சுமார் 10 ஆட்டுப்பட்டிகளில் புகுந்த வெறிநாய்கள் ஆடுகளை கடித்தும், குதறியும் வைத்து விட்டுள்ளது. அந்த நேரத்தில் மழை பெய்து நின்றதால் விவசாயிகள் யாரும் சரியாக கவனிக்காமல் இருந்துள்ளனர்.
சில இடங்களில் பொதுமக்கள் அந்த வெறிநாய்களை விரட்டியபோதும், விடாமல் ஆடுகளை கடித்துள்ளது.
இரவு 12 மணிக்கு மேல் பகல் போல பொதுமக்கள் அங்கும், இங்குமாக ஓடி உள்ளனர்.
இது குறித்து ஒரு விவசாயிடம் கூறியபோது திருப்பைஞ்ஞீலி பகுதியில் மாட்டு கறி வெட்டும் பகுதியில் இருந்து கிளம்பியிருக்கும் என்றும் அங்கு மாமிசங்களை தின்று பழக்கமாயி சில சமயங்களில் இது போல ஊர்களில் புகுந்து, ஆடுகளையும் மாடுகளையும் கடித்து விடுகின்றன என்று தெரிவித்தார்.
மற்றுமொரு விவசாயி சுப்ரமணி மனைவி பொண்ணி கூறுகையில்,
நான் நகைகளை அடகுவைத்து 7ஆடுகளை வாங்கி தற்போது விற்கும் தருவாயில் இருக்கும் நிலையில் இப்படி வெறிநாய்கள் கடித்து விட்டது. இந்து ஆடுகள் பிழைக்குமா பிழைக்காதா, தெரியவில்லை என்றும் கண்ணீர் மழ்க கூறினார்.
வெளியூர் நாய்கள் திரிவதை கண்ட உள்ளுர் தெரு நாய்களும் விரட்டி பார்த்தும் வெறிநாய்கள் போகவில்லை.