திருச்சி வடக்கு அரியாவூரை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவரது மனைவி லலிதா. இவர் சோமரசம்பேட்டையில் சமையல் தொழில் செய்து வரும் சுரேஷ்(47) என்பவரிடம் வேலை செய்து வருகிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு சுரேஷ் தனது இருசக்கர வாகனத்தில் லலிதாவை அழைத்து சென்றுள்ளார்.
இதனை பார்த்து சந்தேகம் அடைந்த முத்துச்சாமி, சோமரம்பேட்டை அருகே உள்ள அதவத்தூர் பகுதிக்கு சுரேஷை வரவழைத்துள்ளார். சுரேஷ் வந்த உடன், அங்கு தனது நண்பர் இளங்கோவனுடன் சேர்ந்து இரும்பு ராடால் கொலைவெறி தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்தார் முத்துச்சாமி.இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் உதயகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்