ஒரு வரலாறு என்பது அதன் கல்வெட்டின் அடையாளத்தை பொறுத்து மட்டுமே நாம் யூகிக்க முடியும்.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோவில்களிலும் இருக்கும் கல்வெட்டுகளும் மற்றும் நடுக்கல் போன்றவைகளில் காணப்படும் கல்வெட்டுகள் செப்பேடுகளை வைத்து நாம் முன்னோர்கள் வரலாறு அறிய முடிகிறது.
அந்த வரலாறை அறிய வேண்டும் என்பதற்காகவே நம் முன்னோர்கள் தமிழ் மன்னர்கள் அவர்கள் வரலாறு கூறும் விதமாக கல்வெட்டின் ஒவ்வொரு கோவில்களிலும் பதிவிட்டிருந்தனர்.
அந்த வகையில் ஸ்ரீரங்கம் கோயிலிலும் கல்வெட்டுகள் பதியப்பட்டுள்ளது. அதில் கல்வெட்டுகள் மேலாகவே கற்கள் உடைந்து சிதிலடைந்து இருப்பதால் கல்வெட்டுகள் உடையப்பட்டு காணப்படுகிறது..
இதனால் இதற்குப் பின்வரும் சந்ததிகள் வரலாறு என்னவென்று தெரியாமல் போய்விடும் இருக்கும் வரலாறு மறக்கடிக்கப்பட சூழ்நிலை கூட உருவாகும் நிலைமை ஏற்படும்.
ஆகையால் அதிகாரிகள் தொடர்பு கொண்டு இதற்கு தீர்வு கண்டு இதனை சரி செய்யுமாறு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்