சிறுகனூர் அருகே ஊட்டத்தூர் தெரணி பாளையத்தில் சிறுகனூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களை துரத்தி பிடித்து விசாரித்தனர். விசாரணையில், லால்குடி தாதம்பாளையம் நடுத்தெருவை சேர்ந்த சதாசிவம் மகன்களான தர்மராஜ் (வயது21), பழனிச்சாமி (20), என்பதும், தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறித்ததும் தெரிய வந்தது. இதேபோல் மண்ணச்சநல்லூர் பகுதிகளிலும் நகை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து இந்த சகோதர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து நகைகளை மீட்டனர். இதுகுறித்து சிறுகனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்