ஐஜி அலுவலகம் முன்பு சாலை மறியல்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சேர்ந்த தமிழழகி (வயது21) என்ற பெண் திருமணம் ஆகி இரண்டு வருடத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான மூன்று பேர் மீது இரண்டு வருடம் ஆகியும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. முறையான விசாரணையை டிஎஸ்பி நடத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட தமிழழகியின் உறவினர்கள் இன்று திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மத்திய மண்டல காவல்துறை தலைவர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்து. காவல்துறையினர் அவர்களை சட்டையை பிடித்து இழுத்து சாலை விட்டு தள்ளி நிற்க செய்தனர். இதனால் மத்திய மண்டல காவல்துறை அலுவலகம் முன்பு பரபரப்பு நிலவி வருகிறது.


Post a Comment

Previous Post Next Post