தத்தமங்கலத்தை சேர்ந்த புல்லட் ராஜா (41). பால் வியாபாரம் செய்யும் புல்லட் ராஜா இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி அதே பகுதியில் உள்ள கன்னியாகுடியை சேர்ந்த லாரி உரிமையாளர் சதீஷ்குமார் என்பவரை அடித்து கொலை செய்த வழக்கில் புல்லட் ராஜா உள்ளிட்ட ஆறு பேரை மண்ணச்சநல்லூர் போலீசார் கைது செய்து புல்லட் ராஜாவை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
திருச்சி மத்திய சிறையில் இருக்கும் புல்லட் ராஜாவை பார்க்க அவரது மனைவி கிருஷ்ணவேணி அடிக்கடி ஆட்டோவில் சென்று வந்துள்ளார். ஆட்டோவில் செல்லும்போது மண்ணச்சநல்லூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சிம்மராசிக்கும் புல்லட் ராஜாவின் மனைவி கிருஷ்ணவேணி (37) ஆகியோருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
அண்மையில் ஜாமீனில் வெளிவந்த புல்லட் ராஜாவுக்கு ஆட்டோ ஓட்டுநர் சின்ன ராசுவும் தனது மனைவி கிருஷ்ணவேணிக்கும் உண்டான கள்ளக்காதலை கண்டித்துள்ளார். இருப்பினும் இருவரும் கள்ளக்காதலை தொடர்ந்தனார்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு சின்னராசு தனது ஆட்டோவில் காதலி கிருஷ்ணவேணி ஏற்றுக்கொண்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ய வந்தனர்.
ஆட்டோவை கோயில் முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தபோது அவர்களை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் தன் மனைவியின் கண் முன்னே ஆட்டோ ஓட்டுனர் சின்னராசுவை கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். இது குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சின்ன ராசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக புல்லட் ராஜா உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.