திருமணத்திற்கு பிறகும் நண்பரை கிரிக்கெட் விளையாட அனுமதிக்க மணப்பெண்ணிடம் 20 ரூபாய் பத்திரத்தில் சம்மத பத்திரம் வாங்கிய நண்பர்கள்

திருமணத்திற்கு பிறகு பெண்கள் எப்படி பிறந்த ஊர் மற்றும் பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டிற்கு போகிறார்களோ...

அதுபோல, ஆண்களும் திருமணத்திற்கு பிறகு திருமணத்திற்கு முன் இருந்த நண்பர்கள் மற்றும் சில பொது செயல்பாடுகளிலிருந்து விட்டு வருவதும் உண்டு.

இது போன்று தனது நண்பருக்கு நடந்து விடக்கூடாது, தமது நண்பரை நம்மை விட்டு பிரிய விடக்கூடாது என்பதற்காக விநோதமாக யோசித்த இன்றைய இளைஞர்கள்.

உசிலம்பட்டி அருகே திருமணத்திற்கு பிறகும் எங்களது நண்பர்களை தாங்கள் (மணப்பெண்) எங்களது நண்பர் (மணமகன்) ஐ எங்களுடன் விளையாட அனுமதிக்க வேண்டும் என சம்ம பத்திரத்தில் கையெழுத்து வாங்கி இருக்கின்றனர்.

இந்த செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

Post a Comment

Previous Post Next Post