இந்திய திரு நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்டு மாதம் 15ம் தேதி கொண்டாடுவதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வீடுகளில் தேசியக்கொடி ஏற்றவேண்டும் என்று கோரியிருந்ததால் இந்தியா முழுவதும் தேசிய கொடி உற்பத்தி வெகு வேகமாக நடந்து வருகிறது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் உளுந்தங்குடி பாளையநல்லூரில் அந்த வகையில் சுய உதவிக்குழு மூலம் தேசியக்கொடி தயார் செய்யும் பணி நடந்து வருவதை மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டார்
Tags:
நம்ம ஊரு செய்திகள்