அதிமுக ஆட்சியில் தவறு செய்தவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்து ஏலம் விடப்படும்- அமைச்சர் பெரியசாமி


கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் ரூ.750 கோடி அளவில் மோசடி நடந்துள்ளது. இதனை கண்டுபிடிக்க மூத்த வக்கீல்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கூட்டுறவுத்துறை மோசடிகள் குறித்து பல வழக்குகள் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை. அடுத்த 2 ஆண்டுகளில் குறைந்தபட்சம் ரூ.300 கோடி மோசடி சொத்துக்களாவது பறிமுதல் செய்து ஏலம் விடப்பட்டு அரசு கஜானாவில் சேர்க்கப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது. கூட்டுறவுத்துறையில் காலிப்பணியிடங்கள் எந்தவித தவறும் நடக்காதவாறு வெளிப்படை தன்மையுடன் நடைபெறும். தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படும். கூட்டுறவுத்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உருவாகி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post