கரூர் செல்ல திருச்சியில் முதல்வர் மு க ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை (02.07.2022) கரூரில் நடைபெறவுள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கவுள்ளார். அதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார்.

அவருடன் அமைச்சர் கே.என்.நேரு, இந்திய ஆட்சிப்பணியில் உள்ள தினேஷ்குமார், நித்தின்ஜான் உள்ளிட்ட அதிகாரிகளும்,  

காவல்துறை கூடுதல் இயக்குனர் டேவிட் சன் தேவஆசிர்வாதமும் வந்திறங்கினார்கள்.

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் புத்தகங்களை கொடுத்து முதலமைச்சரை வரவேற்றனர்

திருச்சி விமானம் நிலையத்தில் காவல் துறையினர் முதல்வருக்கு இசைகருவிகளை வாசித்து வணங்கி மரியாதை செலுத்தினார்கள். விமானநிலையத்தில் திமுகவை சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் கட்சி கொடியுடன் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக முதல்வர் கரூர் புறப்பட்டுச்சென்றார்.



Post a Comment

Previous Post Next Post