மலேசியா நாட்டில் இருந்து 8 ஆயிரம் டன் இரும்பு சரக்குகளுடன் `எம்.வி.பிரின்ஸ்' என்ற சிரியா நாட்டு சரக்கு கப்பல் லெபனான் நாட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. மேலும் கப்பலில் எரிெபாருளுக்கு தேவையான 220 டன் டீசல் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. இந்த சரக்கு கப்பலில் சிரியா நாட்டை சேர்ந்த 15 மாலுமிகள் பயணித்து வந்தனர். இந்த கப்பல் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு புதிய துறைமுகத்தில் இருந்து 5 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் சென்றபோது திடீரென பழுதாகிநின்றது. இதனால் கப்பலில் விரிசல் ஏற்பட்டு கடல்நீர் உள்ளே புகுந்தது. இதனால் அந்த சரக்கு கப்பலில் மேற்கொண்டு பயணிக்க முடியாத நிலை உருவானது. கப்பலில் இருந்த 15 மாலுமிகளும் சிக்கி தவித்தனர். இதுபற்றி மங்களூரு புதிய துறைமுக அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடந்த விபத்து பற்றி கூறி உள்ளே நுழைய அனுமதி கேட்டனர். ஆனால் துறைமுக அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் தகவலின் பேரில் கடலோர காவல் படையினர் 2 மீட்பு கப்பலில் சென்று 15 மாலுமிகளையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்து காப்பகத்தில் சேர்த்தனர். சரக்கு கப்பலை மீட்கவில்லை.
Tags:
இந்தியா