புள்ளம்பாடி அருகே 20 இலட்சம் மதிப்புள்ள 210 ஆடுகள் திருட்டு

 

 லால்குடி அருகே புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது அழுந்தலைப்பூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள காலணித்தெருவைச் சேர்ந்த ராமசாமி, சோலைமுத்து இருவரும் அண்ணன் - தம்பிகள். ராமசாமி மகன் பெருமாள் (55).  சோலைமுத்து மகன் ரெங்கராஜ் (51). இருவரும் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.

தற்போது 210 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தனர். இவர்களது வீட்டிற்கு அருகே அரை கிலோ மீட்டர்  தொலைவில் இவர்களுக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் வயல் பகுதியில் இவர்களது ஆடுகளை பட்டி (கொட்டகை ) அமைத்து இரவு நேரங்களில் ஆடுகளுக்கு காவலாக அண்ணன் தம்பி இருவரும் காவலுக்கு இருந்து மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் ஆடுகளை வளர்த்து வந்தனர்.  

இந்நிலையில் நேற்று இரவு ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்துவிட்டு அண்ணன், தம்பி இருவரும் காவலுக்கு செல்லாமல் அவர்களது வீட்டிலேயே இருவரும் தூங்கி விட்டனர். காலையில் சென்று பார்த்த போது வயலில் பட்டி அமைத்து அடைத்து வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள 210 செம்மறி ஆடுகள் அனைத்தும் திருடுப் போனது தெரிய வந்தது. திருட்டு குறித்து சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திருட்டு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post