திருச்சி ராம்ஜிநகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் - பரபரப்பு

  

திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த கிருபாகரன் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக சந்தேகத்தின் பேரில் ராம்ஜி நகர் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இந்த நிலையில் அந்த வாலிபரின் தாய் அவரை தேடி வந்துள்ளார். அப்பொழுது கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த வீர முத்தரையர் முன்னேற்ற சங்க பொறுப்பாளரான சுந்தர் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று உள்ளார்.

அவரை வழிமறித்த அந்த கிருபாகரனின் தாய் ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் இறக்கி விடுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து அவர் அந்த வாலிபரின் தாயை அழைத்து வந்து ராம்ஜிநகர் காவல் நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார். அப்பொழுது ராம்ஜி நகர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமார் தாய் சுந்தரிடம் நீ எப்படி இங்கு வரலாம் என்று கேட்டு சாதி பெயரை சொல்லி அவரை பிடித்து தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதில் சுந்தருக்கு தலையில் அடிபட்டு உள்ளதாக கூறப்படுகிறது

இதனையடுத்து அவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை அறிந்த வீரமுத்தரையர் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஏராளமானோர் திரண்டு வந்து ராம்ஜி நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு காவல் ஆய்வாளர் விஜயகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் காவல் ஆய்வாளர் ஜாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், அவர் லஞ்சம் பணம் பெற்று வருவதாகவும் வீர முத்தரையர் முன்னேற்றம் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் திடீரென 50க்கும் மேற்பட்ட வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் காவல் ஆய்வாளரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post a Comment

Previous Post Next Post