முக்கொம்பு கொள்ளிடம் புதிய கதவணையில் 45 மதகுகள் உள்ள பகுதியில் தற்பொழுது 100% பணிகள் முடிவடைந்ததை பார்வையிட வந்த மத்திய அமைச்சர்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர்... ஜல் ஜீவன் திட்டம் தொடர்பான செயல்பாடுகளில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் 12% பின்தங்கி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல் ஜீவன் திட்டங்கள் தொடர்பான செயல்கள் 12% மட்டுமே நடைபெற்று உள்ளதாகவும், இது மற்ற மாநிலங்களை விட இது குறைவு எனவும் குறிப்பிட்டார் .
2024 ஆம் ஆண்டு ஒவ்வொரு வீட்டிற்கும் இந்தியா முழுவதும் குடிநீர் வழங்கும் இலக்கை நோக்கி பயணிக்கும் நாம் இன்னும் மூன்று மடங்கு அதிவேகமாக இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். 2024 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு திட்டம் செயல்படுத்த இப்பணிகளை மிக வேகமாக செயல் படுத்தினால் நன்றாக இருக்கும் என்றார்.
தமிழகத்தில் உள்ள அனைவரையும் கேட்டுகொள்வதை தண்ணீர் சேமிப்பதை அவசியம் என உணர வேண்டும். ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் வீணாக்க கூடாது என்றார். ஜல் ஜீவன் திட்டம் தொடர்பான ஏற்கனவே தமிழக அரசுக்கு 1500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது தவணை நிதி கிடைப்பதற்கு அதற்கான வேலைகள் எவ்வளவு விரைவாக நடைபெறுகிறதோ அவ்வளவு விரைவாக அதற்கான நிதி தானாக மாநிலங்களுக்கு வந்துவிடும் என குறிப்பிட்டார்.
முன்னதாக கொள்ளிடம் புதிய கதவணை பார்வையிட்டு மத்திய அமைச்சர் பிரகலாத் கோவிட் காலத்திலும் இந்த கதவணையை மிக சிறப்பாக அதிகாரிகள் துணையுடன் பணியாளர்கள் விரைவாக கட்டியுள்ளனர். அவர்களுக்கு பாராட்டை தெரிவித்தார்.