மாநகரில் 2019ம் ஆண்டு 530 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதில் 36 பேர் இறந்துள்ளனர். 2020ம் ஆண்டு 390 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 41 பேர் வரை இறந்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு 400 விபத்துக்கள் நடந்துள்ளன.
31 பேர் இறந்துள்ளனர். மேலும் மக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை அதி-வேகமாக இயங்கியதன் பேரில் கடந்த 3 மாதத்தில் மட்டும் 900 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மது போதையில் வாகனம் ஒட்டியதாக 200 வழக்குகள் வரை பதிவாகியுள்ளன.
வாகன நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். சமீபத்திய ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்ததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஒப்பிடு-கையில் விபத்துக்கள் குறைவு தான்.
ஆனால் கடந்த சில மாதங்களாகவே போலீசார் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் குறித்து வழக்கு பதிவதில் கெடுபிடி காட்டவில்லை. ஆனால் வரும் காலங்களில் போக்குவரத்து விதிமீறல்கள் வழக்கு அதிக அளவு பதிவு-செய்யப்படும்.
எனவே பொதுமக்கள் போக்குவரத்து விதிமீறல்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றார்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்