தென்னக ரெயில்வே பொன்மலை மத்திய பணிமனையானது, கடந்த 2 ஆண்டுகளில் சுற்றுச்சூழலின் பல்வேறு காரணிகளை மேம்படுத்த பெரும் முயற்சிகளை எடுத்துள்ளது. அதன்படி பணிமனையின் உள்ளேயும், வெளியேயும் பல்வேறு வகையான மரங்கள், தாவரங்கள் வளர்க்கும் மேற்கொண்டு வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக திசு வளர்ப்பு மூங்கில் வகையான பீமா மூங்கில் என்ற சிறப்பு வகை மூங்கில்களை பொன்மலை மத்திய பணிமனையானது நட்டு வருகிறது. இந்த வகை மூங்கில் பல்வேறு சிறப்பு பண்புகளை கொண்டது. இது அதிக கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி மற்ற தாவரங்களை விட அதிக ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது. இது மிக வேகமாக வளரும். அதாவது 30 மாதங்களில் 35 அடி உயரம் வரை வளரும்.
முழுமையாக வளர்ந்த ஒரு செடி 320 கிலோ ஆக்ஸிஜனை வளி மண்ட லத்திற்கு ஆண்டு தோறும் வெளியிடுகிறது. இது ஒரு வருடத்திற்கு ஒரு நபரின் தேவையை விட அதிகமாகும். 4 ஆண்டுகள் முழு வளர்ச்சிக்குப் பிறகு முழு ஆக்ஸிஜன் பூங்காவும் 100 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி விடும்.
மற்ற மூங்கில் வகைகளின் வெற்று குறுக்கு வெட்டுடன் ஒப்பிடும் போது பீமா மூங்கிலின் திடமான குறுக்கு வெட்டில் இருந்து இதை காணலாம். இது 4500 கிலோ (நிலக்கரிக்கு சம மான) மிக அதிக எரிதிறன் மதிப்பைக் கொண்டுள்ளது.
சமூகம் மற்றும் அனைத்து உயிரினங்களுக்கும் ஒரு பங்களிப்பாக ஒரு அக்ஸிஜன் பூங்காவை உருவாக்கும் ஒரு சிறப்பு முயற்சியாக பொன்மலை மத்திய பணிமனையானது தொடங்க ஆரம்பித்துள்ளது.
இதற்காக பொன்மலை டாக்டர் அம்பேத்கர் ரெயில் கல்யாண மண்டபம் அருகே உள்ள யானைகள் பூங்கா சரியாக பராமரிக்கப்படாத நிலையில் இருந்தது. பணி மனையானது செடிகள் மற்றும் புதர்களை களைந்து செப்டம்பர் 2021 முதல் மைதானத்தை தயார்படுத்தியது.
பூங்காவில் மொத்தம் 1050 பீமா மூங்கில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பூங்காவின் வட்ட வடிவத்துடன் பொரு ந்தக்கூடிய வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்த பூங்கா தென்னக ரெயில்வே தலைமை அலுவலக அதிகாரிகள், கோட்ட அதிகாரிகள் மற்றும் பொன்மலை மத்திய பணிமனை அதிகாரிகள் குழுவின் முன்னிலையில் ஸ்ரீ கௌதம் தத்தா, முதன்மை தலைமை எந்திரவியல் பொறியாளரால் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் மக்கள் பயன்பாட்டிற்கான மிகப் பெரிய ஆக்ஸிஜன் பூங்கா இதுவாகும். இதன் மூலம் பொன்மலை ரெயில்வே காலனியில் வசிக்கும் ரெயில்வே ஊழியர்களின் குடும் பத்தினர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் பயனடை வார்கள்.