இந்தியா-பாகிஸ்தான் இடையே நதிநீர் பங்கீடு பற்றி இன்று பேச்சுவார்த்தை

 

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி மற்றும் அதன் துணை ஆறுகளின் தண்ணீரை பங்கீடு செய்வதற்காக, கடந்த 1960ம் ஆண்டு இருநாடுகளுக்கு இடையே, சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதை தொடர்ந்து, இந்த ஒப்பந்தம் தொடர்பான தரவுகளை பரிமாறி கொள்ளவும், ஒத்துழைக்கவும் நிரந்தரமான ஓர் ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. அது சிந்து ஆணையம் என அழைக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீரைப் பகிர்ந்து கொள்வது, நீர் மின் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக இரு நாட்டின் ஆணையங்களும், ஆண்டுக்கு ஒரு முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்தியா தரப்பில் 3 பெண் அதிகாரிகள் உள்பட 9 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளது.முதல் நாளில், நடப்பு ஆண்டுக்கான வெள்ளபாதிப்பு தகவல்கள் மற்றும் சிந்து ஆணையத்தின் நிகழ்ச்சி நிரல்கள் பற்றி விவாதித்தனர்.

2-வது நாளான நேற்று சிறிய அளவிலான நீர் மின் திட்டங்கள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர். இறுதியாக நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் தொடர்பான பல முக்கிய பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்படும் என தெரிகிறது.



Post a Comment

Previous Post Next Post