பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இருக்கும் பெஷாவர் நகரில் உள்ள மசூதி ஒன்றில் இன்று வெடி குண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 30- பேர் பலியாகினர். 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
படுகாயத்துடன் பலர் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
Tags:
உலகம்