மார்ச் 30 ஆம் தேதி முதல் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 கு விண்ணப்பிக்கலாம்

 

குரூப் -4 தேர்வு பற்றிய அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது;  குரூப் 4 தேர்வுக்கு மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.  மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு  200 கேள்விகள் கேட்கப்படும்தேர்வுகள் ஜூலை 24 ஆம் தேதி காலை 9.30 முதல்  12.30 மணி வரை மொத்தம் 3 மணி நேரம் நடைபெறும். 

7,382 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. இதில் 81 இடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பபடும்.   274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களும் இதில் அடங்கும். 90 மதிப்பெண்களுக்கு  மேல் பெறுபவர்களின்  தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.  அக்டோபர் மாதம் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதும் மையத்தை டி.என்.பி.எஸ்.சியே இனி தேர்வு செய்யும்.” என்றார். 

Post a Comment

Previous Post Next Post