திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயதான நர்சிங் மாணவி. திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவரது வீட்டிற்கு பக்கத்து தெருவில் வசிப்பவர் ஆனந்த். இவர் மாணவி வேலைக்கு போகும் போதும், வரும் போதும் பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.
இந்நிலையில் ஆனந்த், மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதனால் மனமுடைந்த மாணவி, எலிமருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு அவரிடம் உறவினர்கள் விசாரித்ததில் நடந்த விஷயத்தை மாணவி கூறியுள்ளார்.
உடனே இச்சம்பவம் குறித்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் குற்றவியல் நீதிமன்றம் எண்.1-ல் நர்சிங் மாணவி புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் லால்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, ஆனந்த் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்