முசிறி அருகே செம்மண் கடத்திய 2 பேர் கைது

 

முசிறி அருகே சோழம் பட்டி கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் செம்மண்ணை, பொக்லைன் இயந்திரம் கொண்டு மண்ணை கடத்துகிறார்கள், என்று தகவல் முசிறி போலீசாருக்கு கிடைத்ததன் பேரில்,  காவல் உதவி ஆய்வாளர் முத்தையன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, 

அங்கு கோளம் பட்டியைச் சேர்ந்த பிச்சையின் மகன் ராஜா, சின்னத்தம்பியின் மகன் தியாகு, ஒளிஞ்சாரியின் மகன் ஹரி பிரகாஷ் ஆகியோர் சேர்ந்து அனுமதியின்றி  எந்திரம் கொண்டு செம்மண் அள்ளிக்கொண்டு  இருந்தனர் அவர்களை போலீசார் பிடித்தனர். அதில் ஹரி பிரகாஷ் மட்டும் தப்பி ஓடிவிட்டார். 

மற்ற இருவரையும் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர். தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post